Published : 18,Jul 2022 07:24 PM
கே.கே. குரலில் ‘தி லெஜண்ட்’ படத்தின் ‘போ.. போ.. போ..’ பாடல் வெளியீடு

லெஜண்ட் சரவணனின் ‘தி லெஜண்ட்’ படத்தின் ‘போ.. போ.. போ..’ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
லெஜண்ட் சரவணா ஸ்டோரின் உரிமையாளர் லெஜண்ட் சரவணன் கதநாயகனாக அறிமுகமாகும் படம் ‘தி லெஜண்ட்’. ஜேடி-ஜெர்ரி இயக்கியுள்ள இந்தப் படத்தை, லெஜண்ட் சரவணனின் தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடெக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில், பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌதாலா லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மறைந்த நடிகர் விவேக், மயில்சாமி, விஜயகுமார், சச்சு, லதா, நாசர், பிரபு, ரோபோ சங்கர், யோகி பாபு, பேபி மானஸ்வி கொட்டாச்சி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இந்தப் படம், வருகிற 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழகத்தில் மட்டும் 800 ஸ்கிரீனில் திரையிடப்படுகிறது. தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமையைக் கோபுரம் ஃபிலிம்ஸின் ஜி.என். அன்புச்செழியன் வாங்கியுள்ளார்.
#TheLegendSaravanan starring #TheLegend Movie #PoPoPo Video Song streaming now https://t.co/vcypoitwzO
— The Legend (@_TheLegendMovie) July 18, 2022
Worldwide release on July 28th#TheLegendSaravanaStoresProduction#TheLegend#TheLegendFromJuly28@jdjeryofficial@Jharrisjayaraj@Gopuram_Cinemas#Anbuchezhianpic.twitter.com/FycYx3iRqz
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் ‘மொசலோ மொசலு’ மற்றும் ‘வாடி வாசல்’பாடல்கள் ஏற்கனவே யூ-ட்யூப் தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில், அடுத்ததாக ‘போ.. போ.. போ..’ என்ற பாடல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் மறைந்த பின்னணிப் பாடகர் கே.கே., பிரசாத் எஸ்.என்., ஜொனிட்டா காந்தி ஆகியோர் பாடியுள்ள இந்தப் பாடல், ரசிகர்களை அதிகளவில் ஈர்த்து வருகிறது. மதன் கார்க்கி பாடல் வரிகளை எழுதியுள்ளார். தினேஷ் நடனம் அமைத்துள்ளார். இந்தப் பாடலின் வீடியோ லிங்க் உங்களுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.