[X] Close

ரஜினியுடன் அரசியலில் இணையத் தயார்: நடிகர் கமல்

Actor-Kamal-rajini

ரஜினியுடன் அரசியல் பேசத் தயார் என்றும், இணைந்து செயல்பட தயார் என்றும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியல் குறித்து சமீப காலமாக ட்விட்டரில் கருத்து தெரிவித்து வரும் நடிகர் கமல்ஹாசன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணையப்போகிறார் என்று தகவல் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இதற்கு விளக்கமளிக்கும் வகையில் தனிக்கட்சி ஆரம்பிக்க உள்ளதாகவும், அதற்கான பணிகளை தொடங்கிவிட்டதாகவும் கமல் தெரிவித்திருந்தார். இதனால் நடிகர் ரஜினிக்கு முன்பே, கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்கிவிடுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் உள்ள தனியார் நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், ‌மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வர தயார் எனவும், இதுதொடர்பாக ரஜினியுடன் பேசத் தயார் என்றும் கூறினார். அத்துடன் தான் தொழிலுக்காக நடிக்கிறேன், ஆனால் பதவிக்காக சிலர் நடித்து வருவதாகவும் விமர்சித்தார். அவர்களைபோல தான் அவ்வளவு பெரிய நடிகன் இல்லை என்றும் கமல் நகைச்சுவையாகக் கூறினார். அத்துடன் அறவழியில் போராடுவதே ஆரம்பம் என்றும்,‌ அஹிம்சையின் உச்சகட்டம் தான் போராட்டம் எனவும் கமல் கூறினார்.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close