Published : 18,Jul 2022 08:39 AM

'இந்நாள் என் வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும்' - ரிஷப் பண்ட் நெகிழ்ச்சி

Will-Remember-For-The-Rest-Of-My-Life-Rishabh-Pant-After-Guiding-India-To-Series-Win-vs-England

கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்த ரிஷப் பண்ட் , 113 பந்துகளில் 2 சிக்ஸர், 16 பவுண்டரிகளுடன் 125 ரன்கள் குவித்தார்.  

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் ரிஷப் பண்ட் (125* ரன்கள்), ஹர்திக் பாண்டியா (71 ரன்கள், 4 விக்கெட்) எடுத்து அசத்த, இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இப்போட்டியின் ஆட்ட நாயகன் விருதை ரிஷப் பண்டும், தொடர் நாயகன் விருதை ஹர்திக் பண்டியாவும் கைப்பற்றினர்.

ஆட்டம் முடிவடைந்த பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ரோகித் சர்மா, ''வாய்ப்பு பெறக் காத்திருக்கும் இளம் வீரர்களை நாங்கள் பெஞ்சில் உட்கார வைத்துள்ளோம். டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக அவர்களை வலிமையான வீரர்களாக உருவாக்க விரும்புகிறோம். காயங்கள் நிகழும், பணிச்சுமையை நிர்வகிக்க வேண்டும், எனவே பெஞ்சில் இருக்கும் வீரர்களின் வலிமையை பேண வேண்டும். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இளம் வீரர்கள் வாய்ப்பு பெற்றுள்ளனர்.

image

தொடர் வெற்றியால் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஒயிட் பால் போட்டிகளில் குழுவாக ஏதாவது சாதிக்க வேண்டும் என நினைத்தோம். அதை செய்து முடித்திருக்கிறோம். முன்னோக்கிச் செல்லும்போது நாம் மேம்படுத்த வேண்டிய விஷயங்கள் உள்ளன. எனக்கு நினைவிருக்கிறது. கடந்த முறை நாங்கள் இங்கு வந்தபோது திருப்திகரமான சீசனாக அமையவில்லை.

இது ஒரு நல்ல பிட்ச். ஆனால் ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்ததால் இந்த வெற்றி எளிதாக கிடைக்கப் போவதில்லை என்பது எங்களுக்குத் தெரிந்தது. இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், மிடில் ஓவர்களில் அதிகம் பேட்டிங் செய்யாத ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரும் இந்தப் போட்டியில் அருமையாக விளையாடினார்கள்.  எந்த நேரத்திலும் அவர்கள் பீதியடைந்ததாக நாங்கள் உணரவில்லை. அவர்கள் சிறந்த ஷாட்களை ஆடினர்'' என்றார்.

image

ஹர்திக் பண்டியா கூறுகையில், ''எனக்கு ஷார்ட் பந்துகள் என்றால் மிகவும் பிடிக்கும். நான் ஒரு விக்கெட் வீழ்த்துவது 6 சிக்ஸர்கள் அடிப்பதற்கு சமம். ஒரு பவுலராக நான் வெட்கமற்றவன் என்று நான் எப்போதும் உணர்கிறேன். நான் எவ்வளவு தூரம் அடிபட்டாலும் கவலைப்பட மாட்டேன். ரிஷப் பண்டின் திறமையை நாங்கள் அனைவரும் அறிவோம். இறுதியாக இன்று அவர் நல்ல சூழ்நிலையில் விளையாடினார். பார்ட்னர்ஷிப் எங்களது ஆட்டத்தை மாற்றியது. ரிஷப் பண்ட் ஆட்டத்தை முடித்த விதமும் சிறப்பு" என்றார்.

image

ரிஷப் பண்ட் கூறுகையில், "எனது முதல் ஒருநாள் போட்டி சதம் இது. இதை எனது வாழ்நாள் முழுவதும் இந்த ஆட்டத்தை நினைவில் வைத்திருப்பேன். நான் பேட்டிங் செய்யும் போது ஒரு பந்தில் மட்டுமே கவனம் செலுத்தினேன். உங்கள் அணி அழுத்தத்தில் இருக்கும்போது, நீங்கள் அப்படித்தான் பேட் செய்வீர்கள். நான் அணிக்காக ஏதாவது செய்ய ஆசைப்படுகிறேன்" என்றார்.

இதையும் படிக்கலாம்: அவங்க கண்ணுல பயமே கிடையாது' - ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியாவை புகழ்ந்த ரோகித் சர்மா

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்