Published : 17,Jul 2022 04:40 PM
சிங்கப்பூர் ஓபன் பட்டம் வென்று சாதனை படைத்தார் பி.வி.சிந்து!

சிங்கப்பூரில் நடைபெற்ற ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி வி சிந்து சாம்பியன் பட்டம் வென்றார். இதில் அரையிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ஜப்பானின் சயனா கவாகாமி ஆகியோர் மோதினர். இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய பி.வி.சிந்து 21-15, 21-7 என்ற நேர் செட் கணக்கில் சயனா கவாகமியை வீழ்த்தி பி.வி.சிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இறுதிப் போட்டியில் சீன வீராங்கனை வாங்க் ஷி யியை (Wang zhi yi) எதிர்கொண்டு விளையாடினார் இந்தியாவின் பி.வி.சிந்து. 21-9, 11-21, 21-15 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார். இதன் மூலம் சிங்கப்பூர் ஓபன் பட்டத்தை வென்ற இந்திய பெண்களில் இரண்டாவது இடத்தையும், ஒட்டுமொத்தமாக இந்தியாவில் மூன்றாவது இடத்தையும் பெற்று பெருமைக்குரியவராகியுள்ளார் சிந்து. சாய்னா நேவால் (Saina Nehwal), பி.சாய் பிரனீத்தை (B Sai Praneeth) தொடர்ந்து சிந்து சிங்கப்பூர் ஓபன் பட்டம் வென்றுள்ளார்.