Published : 17,Jul 2022 11:19 AM

நாட்டில் புதிதாக 20,528 பேருக்கு கொரோனா: 49 பேர் உயிரிழப்பு

According-to-the-Ministry-of-Health-20528-people-have-been-affected-by-the-corona-virus-infection-across-the-country-today

நாடு முழுவதும் இன்று மட்டும் 20,528 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இன்றைய அறிக்கையின்படி, நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 20,528 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 17,790 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். மொத்தமாக இதுவரை 4,30,81,441 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

image

இன்று மட்டும் 49 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மொத்தமாக இதுவரை 5,25,709 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்து உள்ளனர். நாடு முழுவதும் தற்போது 1,43,449 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே நேரத்தில் இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் சதவீதம் 98.47 ஆகவும், உயிரிழப்பு சதவீதம் 1.20 ஆகவும் உள்ளது. நேற்று மட்டும் 25,59,840 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இதுவரை மொத்தமாக 1,99,98,89,097 டோஸ்கள் நாடு முழுவதும் செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிக்கலாம்: கொரோனா பூஸ்டர் டோஸ்: யாருக்கெல்லாம் அவசியப்படுகிறது... நிபுணர்கள் சொல்வது என்ன?

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்