Published : 16,Sep 2017 03:10 AM

நின்றுகொண்டிருந்த பஸ் மீது லாரி மோதல்: 5 பேர் பலி

bus-lorry-collide--5-tourists-dead

நின்று கொண்டிருந்த பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 

ஆந்திராவைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர் கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அவர்கள் சென்ற பேருந்து நெல்லை ஐ.ஆர்.டி தொழில்நுட்ப கல்லூரி அருகே இன்று காலை நின்றுகொண்டிருந்த போது, பின்னால் வந்த லாரி பேருந்து மீது மோதியது. இதில் 2 பெண்கள் உள்பட 4 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். தகவலறிந்து அங்கு விரைந்த காவல்துறையினர் காயமடைந்த 4 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதிகாலையில் நிகழ்ந்த இந்த விபத்தால் நெல்லை-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்