Published : 16,Jul 2022 04:23 PM
சரமாரியாக தாக்கிக் கொண்ட இளம்பெண், இளைஞர்.. டெல்லி மெட்ரோ ரயிலில் பரபரப்பு

டெல்லி மெட்ரோ ரயிலில் இளம் பெண் ஒருவரும், இளைஞரும் சரமாரியாக சண்டை போட்டுக்கொண்ட தேதி குறிப்பிடப்படாத காட்சி இணையத்தில் பரவி வருகிறது. மெட்ரோ ரயிலில் பயணித்த பெண் ஒருவர், தான் வாங்கிய ஆடையின் மதிப்பு ஆயிரம் ரூபாய் என தன்னுடன் பயணித்த ஆண் நண்பரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த ஆடை 150 ரூபாய்க் கூட மதிப்பு பெறாது என நண்பர் விமர்சித்துள்ளார்.
गर्लफ्रेंडने बॉयफ्रेंडला काढलं बुकलून, दिल्ली मेट्रोमधील व्हिडीओ व्हायरल pic.twitter.com/bO7BXnYFZ4
இதனால் ஆத்திரமடைந்த அப்பெண், ஆண் நண்பரை கன்னத்தில் அறைந்துள்ளார். அந்த இளைஞரும் பெண்ணின் கன்னத்தில் அறைய, இருவரும் மாறி மாறி சண்டையிட்டுக் கொண்டனர். இந்த சம்பவத்தை அப்போது மெட்ரோ ரயிலில் பயணித்தவர்களில் ஒருவர் செல்ஃபோனில் படமெடுத்து வெளியிட்டுள்ளார். இது உண்மையான சண்டையா அல்லது சமூக ஊடகங்களுக்காக நடத்தப்பட்ட ஏமாற்றுச் (Prank) சண்டையா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
முன்னதாக நொய்டா மெட்ரோ ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலுக்கு வழிவகுக்கும் வகையில் ரசிகர்களுடன் பிறந்தநாள் பார்ட்டியை நடத்தியதற்காக யூடியூபர் கவுரவ் தனேஜா கைது செய்யப்பட்ட நிலையில், டெல்லி மெட்ரோவில் ஆண் பெண் இருவருக்கும் இடையில் சண்டை நடைபெற்ற வீடியோ வெளிவந்துள்ளது.