Published : 16,Sep 2017 02:37 AM

பாலியல் வன்கொடுமை: முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு சிறை

Former-SA-cricketer-jailed-for-rape

பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பாக, தென்னாப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு 18 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த உள்ளூர் கிரிக்கெட் வீரர் டியான் தலார்ட். தற்போது 47 வயதாகும் இவர், தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து கிளப் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் மீது பெண் ஒருவர், பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்தார். 2002 முதல் 2012 வரை 150 முறை அவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்திருந்தார். இந்த வழக்கு விசாரணை இங்கிலாந்தின் மான்செஸ்டர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் டியான் தலார்ட் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் அவருக்கு 18 வருட சிறை தண்டனையை விதித்தது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்