Published : 16,Jul 2022 11:21 AM

கர்நாடகா டூ கேரளா: காய்கறி லாரியில் கடத்தப்பட்ட குட்கா பறிமுதல் - மதிப்பு எவ்வளவு தெரியுமா

Karnataka-to-Kerala-Gutka-seized-in-vegetable-truck-Know-how-much-it-s-worth

கர்நாடகாவில் இருந்து கூடலூர் வழியாக கேரளாவுக்கு கடத்த முயன்ற 15 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை கூடலூர் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

கர்நாடகா மற்றும் கேரள மாநில எல்லை பகுதியில் இருக்கிறது நீலகிரி மாவட்டம் கூடலூர். இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து கூடலூர் வழியாக கேரளாவிற்கு அதிக அளவில் குட்கா புகையிலை பொருட்கள் கடத்தப்படுகிறது. இதையடுத்து நேற்று இரவு கூடலூர் வழியாக காய்கறி லாரியில் குட்கா பொருள்கள் கடத்தப்படுவதாக கூடலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

image

இதைடுத்து கூடலூர் போலீசார், தொரப்பள்ளி சோதனை சாவடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கேரள பதிவெண் கொண்ட காய்கறி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், லாரியின் உள்ளே 29 மூட்டைகளில் குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

image

இதைத் தொடர்ந்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்துள்ள கூடலூர் காவல்துறையினர் லாரியை ஒட்டி வந்த கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்தைச் சேர்ந்த சாஜர் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களின் மதிப்பு 15 லட்சம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்