கொரோனா பூஸ்டர் டோஸ்: யாருக்கெல்லாம் அவசியப்படுகிறது... நிபுணர்கள் சொல்வது என்ன?

கொரோனா பூஸ்டர் டோஸ்: யாருக்கெல்லாம் அவசியப்படுகிறது... நிபுணர்கள் சொல்வது என்ன?
கொரோனா பூஸ்டர் டோஸ்: யாருக்கெல்லாம் அவசியப்படுகிறது... நிபுணர்கள் சொல்வது என்ன?

கொரோனா அதிகரித்து வரும் இந்த நேரத்தில், கொரோனா பூஸ்டர் டோஸ் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்க உதவும் மூன்றாம் தவணை கோவிட் தடுப்பூசியை போட வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றனர். உண்மையில் மூன்றாம் தவணை தடுப்பூசி குறித்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

மருத்துவத்துறையில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவது வழக்கமான ஒன்று தான். Dpt, ஹெபடைடிஸ், போலியோ ஆகிய பல நோய்களுக்கு பூஸ்டர் டோஸ் போடப்பட்டு தான் வருகிறது. அதே போல் தான் கோவிட் தொற்றுக்கு எதிராகவும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள முதல் இரண்டு தவணைகள் மட்டுமின்றி கூடுதலாக மூன்றாம் தவணை தடுப்பூசி போடுவது உலக நாடுகள் பலவற்றில் தற்போது நடைமுறையில் உள்ளது.

முதல் இரு தவணைகளிலும் எடுத்துக் கொண்ட கோவிட் தடுப்பூசியின் மூலம் உடலில் உருவான நோய் எதிர்ப்புத் திறன் நாட்கள் செல்லச் செல்ல குறைந்து கொண்டே வருவதால் மூன்றாம் டோஸ் அவசியம். தினசரி தன்னைத் தானே உருமாற்றிக் கொண்டு வீரியத்துடன் மனிதர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருப்பதால் கட்டாயம் பூஸ்டர் டோஸ் தேவை.

தடுப்பூசி செலுத்தி முடித்த ஒரு நபரின் உடலில் கோவிட் தொற்று உள் நுழைந்தால் , ஏற்கனவே இருக்கும் நோய் எதிர்ப்புத்திறன் உடனடியாக வேலை செய்து தீவிர பாதிப்பு ஏற்படாமல் தடுக்க வேண்டும். ஆனால் அவ்வாறு இல்லாமல் சுமார் 10 மாதங்களில் நோய் எதிர்ப்புத்திறன் குறைகிறது எனும் நிலையில் பூஸ்டர் டோஸ் அவசியமாகிறது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, இதய நோய், சிறுநீரக பாதிப்பு, புற்று நோய், எய்ட்ஸ் பாதித்தவர்களுக்கு எப்போதுமே நோய் எதிர்ப்புத்திறன் குறைவு என்பதால் அவர்கள் எக்காரணம் கொண்டும் 3 ஆம் தவணையை தவிர்க்கக் கூடாது.

இவர்கள் மட்டுமின்றி இந்த 4 ஆம் அலையிலும் இணைநோய்கள் கொண்டோர் குறிப்பாக உயர்ரத்த அழுத்தம், நீரிழிவு ஆகிய நோய்களோடு வாழும் வயது முதிர்ந்தோர் தான் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதை குறிப்பிட வேண்டியுள்ளது. 2 தவணை கோவிட் தடுப்பூசி எடுத்துக் கொண்ட தகுதியுள்ளோர் அனைவரும் பூஸ்டர் செலுத்திக் கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக வயது முதிர்ந்தோர் உடனடியாக பூஸ்டர் செலுத்த வேண்டியது அவசியம்.

- செய்தியாளர்: சுகன்யா

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com