Published : 15,Jul 2022 10:44 PM

10ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கி விட்டு மற்றொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் - இளைஞர் கைது

Young-man-arrested-under-POCSO-for-making-10th-class-girl-pregnant-at-Thiruchendur

திருச்செந்தூர் அருகே குலசேகரபட்டினத்தில் பள்ளி மாணவியை காதலிப்பதாகக் கூறி கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருச்செந்தூர் அருகே குலசேகர பட்டினத்தைச் சேர்ந்த கந்தசாமி என்பவரின் மகள் சுமதி (15). இவர் அப்பகுதியிலுள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். தனது உறவினரான திசையன் விளையைச் சேர்ந்த துரை என்பவரின் மகன் வேம்பு ராஜா (24), சொந்தமாக டிராவல்ஸ் ஒன்று வைத்து நடத்தி வருகிறார். வேம்பு ராஜா தனது உறவினரான சுமதியை அடிக்கடி நேரில் சந்தித்து பேசி, இருவரும் தங்களது காதலை வளர்த்து வந்த நிலையில் சிறுமி சுமதி கர்ப்பமடைந்துள்ளார்.

image

இந்நிலையில் சுமதி 7 மாதம் கர்ப்பமான நிலையில் வேம்பு ராஜாவிற்கு தருவைகுளத்தைச் சேர்ந்த மற்றொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதை தெரிந்து கொண்டார் சுமதி. தனது பெற்றோருக்கு தங்களுடைய காதல் விவகாரத்தை தெரியப்படுத்தியுள்ளார். இதனை அடுத்து சுமதியின் பெற்றோர் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இந்த புகாரின் பேரில் இருவரிடமும் விசாரணை நடத்தியதில் சுமதியை வேம்பு ராஜா காதலித்ததும் கர்ப்பமாக்கியதும் உண்மை என்று தெரியவந்தது. அதன்படி சிறுமிக்கு ஆசைவார்த்தை கூறி கர்ப்பமாக்கி ஏமாற்றிய வேம்பு ராஜாவை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்