
தமிழகத்தில் ஒரு வாரம் குறைந்திருந்த கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.
தமிழகத்தில் மே மாதம் முதல் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. மே மாதத்தில் 0.3 சதவீதமாக இருந்த தொற்று உறுதியாகும் சதவீதம், தற்போது 6.9 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. மே முதல் ஜுலை 7 ஆம் தேதி வரை படிப்படியாக உயர்ந்து வந்த தொற்று எண்ணிக்கை ஒரு கட்டத்தில் 2,750யை கடந்தது. இதற்கு அடுத்த ஒரு வாரம் முழுவதும் தொற்று உறுதியானோர் எண்ணிக்கை குறைந்தது. அதாவது ஜூன் 13ஆம் தேதி 2,269 பேருக்கு தான் தொற்று கண்டறியப்பட்டது.
ஜூலை 7 - 2,765
ஜூலை 8 - 2,722
ஜூலை 9 - 2,671
ஜூலை 10 - 2,537
ஜூலை 11 - 2,448
ஜூலை 12 - 2,280
ஜூலை 13 - 2,269
ஜூலை 14 - 2,283
ஜூலை 15 - 2,312
ஆனால் இரண்டு நாட்களாக இந்த நிலை மாறி மீண்டும் பாதிப்பு எண்ணிக்கை உயரத் தொடங்கியுள்ளது. நேற்று 2,283 பேருக்கும், இன்று 2,312 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. எண்ணிக்கை உயர்வது மட்டுமின்றி , திருவள்ளூரைச் சேர்ந்த 71 வயது முதியவர் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட பல்வேறு இணைநோய்களுடன் கொரோனா தொற்றும் ஏற்பட்டு சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாம்: மீண்டும் தலைதூக்கும் ஒமைக்ரான் பி.ஏ.5 கொரோனா.. பைடனின் எச்சரிக்கை சொல்வது என்ன?