2 கொரோனா தடுப்பூசிகளால் உயிர்பிழைத்த 1.2 கோடி பேர்! இந்தியாவில் எத்தனை பேர்?

2 கொரோனா தடுப்பூசிகளால் உயிர்பிழைத்த 1.2 கோடி பேர்! இந்தியாவில் எத்தனை பேர்?
2 கொரோனா தடுப்பூசிகளால் உயிர்பிழைத்த 1.2 கோடி பேர்! இந்தியாவில் எத்தனை பேர்?

அஸ்ட்ராஜெனகா, ஃபைசர் கொரோனா தடுப்பூசிகள் சுமார் ஒரு கோடியே 20 லட்சம் உயிர்களை காப்பாற்றியுள்ளதாக ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த ஏர்ஃபினிட்டி என்ற நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் இத்தகவல் கூறப்பட்டுள்ளது.

அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியால் 63 லட்சம் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளதாகவும் ஃபைசர் தடுப்பூசியால் 59 லட்சம் உயிர்கள் காக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. கொரோனா தாக்கிய முதல் ஆண்டில் மட்டுமே இவ்வளவு உயிர்களை இத்தடுப்பூசிகள் காப்பாற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. லண்டனை சேர்ந்த இம்பீரியல் கல்லூரி கடந்த மாதம் நடத்திய ஆய்வில் கொரோனா தடுப்பூசிகளால் 2 கோடி உயிர்கள் காப்பாற்றப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com