Published : 14,Jul 2022 03:43 PM

சிவப்பா? வெள்ளையா? - எந்த வெங்காயம் ஆரோக்கியமானது? ஏன்?

Which-onion-is-more-Nutritious--Red-or-White-

பெரும்பாலான உணவுகளின் சுவையில் வெங்காயத்திற்க்கென்று தனி இடம் இருக்கும். அதிலும் பல மசாலாக்கள், பொருட்கள் சேர்த்து காரசாரமாக சமைக்கப்படுகிற இந்திய உணவுகளைப்பற்றி சொல்லவேண்டுமா என்ன? வெங்காயத்தில் பல வகைகள் இருந்தாலும் நமது உணவுகளில் சிவப்பு அல்லது வெள்ளைநிற நிற வெங்காயங்களைத்தான் பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். பச்சையாக சாப்பிட்டாலும் சரி, சமைத்து சாப்பிட்டாலும் சரி; உடல் ஆரோக்கியத்தில் வெங்காயத்தின் பங்கு அளப்பரியது. இருப்பினும் எந்த வகை வெங்காயம் ஊட்டச்சத்து வழங்குவதில் சிறந்தது என்று விளக்குகிறார் பிரபல செஃப் சஞ்சீவ் கபூர். வெள்ளைநிற வெங்காயத்தில் நோயெதிர்ப்பு சக்தியும், அழற்சி எதிர்ப்புத்தன்மையும் அதிகமாக இருப்பதாகவும், ஆயுர்வேத மருத்துவத்தில் இந்த வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது எனவும் ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுவதாகத் தெரிவிக்கிறார்.

image

நமது அன்றாட சமையலில் அத்தியாவசியமானதாக கருதப்படுகிற வெங்காயமானது சூரிய ஒளி மற்றும் வெயிலுக்கு எதிராக போராடுகிறது என்கிறார் அவர். மேலும், பொதுவாக வெங்காயம்,
1. நார்ச்சத்து நிறைந்தது
2. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
3. இதய ஆரோக்கியத்தி மேம்படுத்தும்
4. உடற்சூட்டை தணிக்கும்
5. சுவாசப்பாதை பிரச்னைகளை சரிசெய்யும்

இதுதவிர வெள்ளைநிற வெங்காயத்தில் இயற்கையாகவே குணப்படுத்தும் பண்புகள் இருப்பதால் அவை மூக்கு கண்கள் மற்றும் காது தொற்றுக்களை சரிசெய்யும். மேலும் வெங்காயத்திலுள்ள காரம், அமிலத்தன்மை பிரச்னையால் அவதிப்படுபவர்களுக்கு பெருமளவில் உதவும். குறிப்பாக முடி உதிர்தல் மற்றும் முடி மெலிதல் போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்கள் வெங்காய ஜூஸை எடுத்து தலையில் தடவிவர முடி செழித்து வளர்தலைக் காணலாம்.

அதேசமயம், சிவப்பு வெங்காயத்தில் மாங்கனீஸ், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி6 ஆகியவை அதிகளவில் செறிந்திருக்கிறது. மேலும் இது கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள், சர்க்கரை மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றையும் கொண்டுள்ளது. இருப்பினும், ஊட்டச்சத்துக்களை பொருத்தவரையில் வெள்ளை வெங்காயம் குறைவான காரமுடையதாகவும், அழற்சி எதிர்ப்புத்தன்மை கொண்டதாகவும், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்ததாகவும் உள்ளது என்கிறார் கபூர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்