ஐ.சி.சி ஒருநாள் போட்டி தரவரிசை - ஒரே போட்டியில் ’டாப்’-க்கு முன்னேறிய பும்ரா!

ஐ.சி.சி ஒருநாள் போட்டி தரவரிசை - ஒரே போட்டியில் ’டாப்’-க்கு முன்னேறிய பும்ரா!
ஐ.சி.சி ஒருநாள் போட்டி தரவரிசை - ஒரே போட்டியில் ’டாப்’-க்கு முன்னேறிய பும்ரா!

ஐ.சி.சி. ஒரு நாள் போட்டிக்கான சிறந்த பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இந்திய அணி வீரர் ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், பும்ரா 6 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் 2 ஆண்டுகளுக்கு பிறகு, 718 புள்ளிகளுடன் பும்ரா மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இதேபோன்று ஐ.சி.சி. தரவரிசையில், பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி இந்தியா 3 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள்  போட்டியில், இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், ஐ.சி.சி. தரவரிசை பட்டியலில், முன்னதாக 4-வது இடத்தில் இருந்த இந்தியா 3 ஆவது இடத்திற்கு முன்னேறியது.

மேலும் ஐசிசி டி20 தரவரிசையில் ஆச்சர்யமளிக்கத்தக்க வகையில் இந்திய வீரர் 44 இடங்கள் முன்னேறி 5வது இடத்தைப் பிடித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் 117 ரன்களை குவித்து அசத்தியதால் இந்த விறுவிறு முன்னேற்றத்தை கண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com