
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் அலுவல் சாரா இயக்குனராக, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். இவருக்கு மத்திய பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் புதிய பதவி அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் அலுவல் சாரா இயக்குனராக தமிழிசை நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்று அமைச்சரவை நியமனக் குழு இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழிசை சவுந்தரராஜன் இந்த பதவியில் மூன்றாண்டுகள் நீடிப்பார் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.