[X] Close

காங்கிரஸ் கட்சியின் தலைவராகிறார் ராகுல்காந்தி: வீரப்ப மொய்லி தகவல்

Rahul-Gandhi-will-be-congress-president-soon

ராகுல் காந்தி உள்கட்சி தேர்தல் மூலம் காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கபட உள்ளார் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.


Advertisement

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தியும், துணை தலைவராக ராகுல் காந்தியும் இருந்து வருகின்றனர். ராகுல் காந்தியை தலைவராக நியமனம் செய்ய வேண்டும் என கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், உள்கட்சி தேர்தல் மூலம் கட்சி தலைவர் ஆகவேண்டுமென ராகுல் காந்தி விரும்புகிறார் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வீரப்ப மொய்லி, "ராகுல் காந்தி உடனடியாக தலைவர் பதவி ஏற்பது கட்சிக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது. ஆனால், அவர் தலைவர் ஆவதை தாமதம் செய்து வருகிறார். அவர் உட்கட்சி தேர்தலை எதிர்பார்த்துள்ளார். கட்சியினர் மூலம் தலைவராக தேர்வு செய்யப்படுவதையே அவர் விரும்புகிறார். ராகுல் காந்தி தற்போது கட்சியின் தலைமையை ஏற்க முழுமையாக தயாராக இருப்பதாக சோனியா காந்தி கூறியுள்ளார். ராகுல் தலைமை பொறுப்பை ஏற்பது அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அவர் உடனடியாக காங்கிரஸ் கட்சியின் தலைவராக வேண்டும். இந்த மாத இறுதிக்குள் உள்கட்சி தேர்தல் முடிந்துவிடும் என கருதுகிறேன். இதைத்தொடர்ந்து ராகுல் அடுத்த மாதம் தலைவர் பதவி ஏற்பார். ராகுல் காந்தி புதிய அணுகுமுறையை கொண்டவர். புதிய யோசனைகளை தெரிவித்து வருகிறார். எனவே அவரது தலைமையில் காங்கிரஸ் கட்சி நிச்சயம் வலிமை பெறும்" என்று கூறினார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close