Published : 13,Jul 2022 11:00 AM

முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் குணமடைய ஆளுநர் ஆர்.என்.ரவி பிரார்த்தனை

Governor-RN-Ravi-s-letter-to-the-Stalin-to-recover-fast

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனாவிலிருந்து விரைந்து குணமடைய பிரார்த்திப்பதாக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தனது அக்கடிதத்தில், “முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு... நீங்கள் கொரோனா பாதிப்புக்கு உள்ளானதை அறிந்து, மிகுவும் வருத்தமடைந்தேன். நீங்கள் மிகவும் சுறுசுறுப்பான மக்கள் தலைவர். தொடர்ந்து மக்களோடு தொடர்பில் இருப்பவர். அதனாலேயே உங்களுக்கு தொற்று அபாயமும் இருந்திருக்க வேண்டும். நீங்கள் விரைந்து குணமடைய பிராத்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

image

முன்னதாக நேற்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தனக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக அதிகாரபூர்வ சமூகவலைதள பக்கங்களில் தெரிவித்திருந்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்