Published : 12,Jul 2022 11:29 AM
ஒரே அளவில் புதிய தொற்றாளர்கள் Vs ஒருநாள் டிஸ்சார்ஜ் - இந்தியாவின் இன்றைய கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,615 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 20 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இன்றைய புள்ளி விவரங்கள் படி நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 13,615 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 13,265 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். மொத்தமாக இதுவரை இந்தியாவில் 4,29,96,427 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் கொரோனாவுக்கு உயிர் இழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,25,474 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் தினசரி சதவீதம் 3.23 ஆகவும், வாராந்திர சதவீதம் 4.24 ஆகவும் உள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோர் மொத்த சதவீதம் 98.50 ஆகவும், உயிரிழப்பு சதவீதம் 1.20 ஆகவும் உள்ளது. நேற்று மட்டும் 10,64,038 பேருக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக 1,99,00,59,536 கோடி டோஸ்கள் நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் கண்காணிப்பை தீவிரப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் பொது இடங்களில் முகக்கவசங்களை கட்டாயமாக அணிய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.