Published : 11,Jul 2022 04:36 PM

ரகரகமாய் 90ஸ் கிட்ஸ் மிட்டாய்களை மட்டும் திருடிய கும்பல்: குளச்சல் பகுதியில் வினோதம்

Bizarre-thieves-broken-shops-and-stolen-90s-kids-Toffees-and-cigarettes-at-Kanyakumari

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் அடுத்தடுத்து மூன்று கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு நடந்துள்ளது. அதிலும் குறிப்பாக 90-ஸ் கிட்ஸ் மிட்டாய், பீடி-சிகரெட் மட்டும் திருடிச்சென்ற வினோத திருடர்களை போலீசார் தேடிவருகின்றனர். 

பொதுவாக திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் வீடுகள், கடைகளின் பூட்டை உடைத்து அங்கிருந்து பணம், நகைகள், விலையுயர்ந்தப் பொருட்களை திருடிச் செல்வது வழக்கம். ஆனால் அடுத்தடுத்து 3-கடைகளின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்ட நபர்கள் வினோதமாக 90-ஸ் கிட்ஸ் மிட்டாய் மற்றும் பீடி சிகரெட்களை மட்டுமே குறி வைத்து திருடிச்சென்ற சம்பவம் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் அரங்கேறியுள்ளது.

image

image

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் லியோன் நகர் பகுதியில் அடுத்தடுத்து 3 பெட்டிக்கடைகள் இருக்கிறது. குடியிருப்புப் பகுதிகள் நிறைந்த இந்த கிராமத்தில் வைத்தே வியாபாரம் செய்துவரும் பெட்டிக் கடை உரிமையாளர்கள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலான வாடிக்கையாளர்களை கவர 90-ஸ் கிட்ஸ் மிட்டாய் பீடி-சிகரட் முதல் பிராண்டேடு பொருட்களையும் விற்பனை செய்து வருகின்றனர்.

image

image

இந்த கடைகளை திறக்க உரிமையாளர்கள் இன்று காலை கடைக்கு வந்தபோது கடைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக குளச்சல் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், கடைகளை திறந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பூட்டை உடைத்து கடைகளுக்குள் புகுந்து திருட்டில் ஈடுபட்டவர்கள், பல விலை அதிகமான பொருட்கள், சாக்லெட்டுகள் உள்ளிட்டவை இருந்தபோதிலும், அவற்றை திருடாமல் கடைக்குள்ளேயே தூக்கி வீசிவிட்டு வினோதமாக 90-ஸ் கிட்ஸ்களின் ஃபேவரிட்டான கடலை மிட்டாய், புளி மிட்டாய், ஜவ்வு மிட்டாய், தேன் மிட்டாய் என ரகரகமாய் இருந்த மிட்டாய்களையும், பீடி-சிகரட்டுகளையும் மட்டுமே குறி வைத்து திருடி சென்றுள்ளது தெரியவந்தது.

image

image

இதனையடுத்து கடை உரிமையாளர்கள் கொடுத்த புகாரில் பேரில் வழக்குப்பதிவு செய்த குளச்சல் போலீசார், திரைப்பட பாணியில் விபரீதம் உணராமல் சிறார் கும்பல் இந்த திருட்டு சம்பவத்தை அரங்கேற்றி இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்