
நோக்கியா என்று சொன்னதுமே விவேக் பாணியில் கனெக்ட்டிங் பீப்புள் என்பதே அனைவரது நினைவுக்கும் வரும். அதற்கடுத்தப்படியாக, நோக்கியா 1100, 3310 ஃபோன்ஸ், ஸ்நேக் கேம்ஸ் பற்றி தெரிந்திருக்கும். ஆனால் நோக்கியோவை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்காத சுவாரஸ்யமான பல தகவல்கள் உள்ளன.
அப்படியான நோக்கியாவின் சில interesting facts பத்தி இப்போ பார்க்கலாம்.
1) Nokia ங்கற பெயர் finland-ல பிர்கன்மாங்கற டவுன்ல இருக்கும் Nokian-virta என்ற நதியின் பெயரில் இருந்துதான் வைக்கப்பட்டுள்ளது. அந்த நதியின் கரையிலதான் நோக்கியாவோட தொழிற்சாலை உருவாக்கப்பட்டது.
2) நோக்கியானாலே மொபைல் ஃபோன் தயாரிக்குற நிறுவனமாதான் எல்லாரும் தெரிஞ்சு வெச்சிருப்போம். ஆனா, நோக்கியா நிறுவனம் முதல் முதல்ல 1865ம் ஆண்டு டாய்லெட் பேப்பர், டயர்ஸ், ரப்பர் போட்ஸ் உள்ளிட்ட பல பொருட்களையே தயாரித்திருந்தது.
3) நோக்கியோவோட theme tune உண்மையில் ஸ்பானிஷ் கம்ப்போசர், கிட்டாரிஸ்ட் ஃபிரான்சிஸ்கோ டாரேகா என்பவரால் உருவாக்கப்பட்டது.
4) நோக்கியாவின் ஸ்பெஷல் மெசேஜ் டோ மோர்ஸ் குறியீட்டிலிருந்துதான் உருவாக்கப்பட்டிருக்கு.
5) உலகின் முதல் சாட்டிலைட் call 1991ம் ஆண்டு நோக்கியாவோட GSM நெட்வொர்க் மூலமாதான் அழைக்கப்பட்டது. அதை ஃபின்லாந்து பிரதமர் ஹாரி ஹோல்கேரி, நோக்கியா தொலைபேசியைப் பயன்படுத்தி பேசினார்.
6) நோக்கியா நிறுவனத்தின் முதல் மின்னணு சாதனமாக pulze analyserதான் இருந்தது. அது 1962ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது.
7) முதல் கையடக்க ஃபோனாக 1984ம் ஆண்டு Mobira Talkman என்ற சாதனத்தைதான் நோக்கியா தயாரித்திருந்தது. இதன் தற்போதைய மதிப்பு 4560 யூரோவாகும். அதாவது 3,66,436 ரூபாய்.
8) நோக்கியாவின் முதல் டச் ஸ்க்ரீன் டெக்னாலஜி கொண்ட ஃபோன் 2004ம் ஆண்டு வெளியிடப்பட்டது. 90s கிட்ஸ்களின் நாஸ்டால்ஜியா இந்த 7710 மாடல் நோக்கியோ ஃபோனும் இருந்தது.
9) அனைவருக்கும் பிடித்தமான நோக்கியா 1100 மாடல் ஃபோன்தான் 2007ம் ஆண்டு அதிகளவில் விற்கப்பட்ட ஃபோனாகும். இதுபோக, இந்த மாடல்தான் உலகளவுலயே அதிகளவுல விற்பனையான ஃபோனாம்.
10) நோக்கியாவின் N சீரிஸ் மாடல்களான N70, N90, N91 ஆகிய ஃபோன்கள் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டவையாகும்.
11) Fortune-ன் 2006ம் ஆண்டு சர்வேப்படி, நோக்கியாதான் உலகின் 20வது பாராட்டத்தக்க நிறுவனமாக இருந்தது.