Published : 11,Jul 2022 10:17 AM

ரோகித் சர்மாவை தகாத வார்த்தையில் திட்டிய ஹர்திக் பாண்டியா? - டிரெண்ட் செய்யும் ரசிகர்கள்

HardikAbusedRohit-trends-on-Twitter-Fans-split-over-viral-video-from-2nd-T20I

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 ஆட்டத்தின்போது ரோகித் சர்மாவை ஹர்திக் பாண்டியா ஆபாசமாக திட்டியதாக சமூக வலைதளத்தில் #HardikAbusedRohit என்ற ஹெஸ்டேக்கில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 215 ரன்கள் குவித்தது. இலக்கை துரத்திய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் இங்கிலாந்து 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எனினும் இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.

இதனிடையே இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 ஆட்டத்தின்போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவை ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஆபாசமாக திட்டியதாக சமூக வலைதளத்தில் டிரெண்டிங் ஆனது.

image

கேப்டன் ரோகித் சர்மா ஃபீல்டிங்கை மாற்றியமைக்கும்போது ஹர்திக் பாண்டியாவின் இடத்தை மாற்றியதால் அதிருப்தியடைந்த அவர் தகாத வார்த்தைகளால் ரோகித்தை திட்டியுள்ளார். இது ஸ்டம்ப் மைக்கில் தெளிவாக கேட்டுள்ளது. இந்த வீடியோ ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவ #HardikabusedRohit என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு வைரலாகி வருகிறது. பல இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் ஹர்திக் பாண்டியாவை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அதேசமயம்  இது ரசிகர்களால் கிளப்பப்பட்ட வதந்தியா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்நிலையில் நேற்றைய மூன்றாவது போட்டியில் ஹர்திக் பாண்டியா ஆடும் லெவன் அணியில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



இதையும் படிக்க: வியக்கவைத்த சூர்யகுமாரின் அதிரடி... வீணாகிப்போன இங்கிலாந்தின் வெற்றி

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்