Published : 10,Jul 2022 09:38 PM

`நீண்டகால தீர்வுகளை காண விரைந்து செயல்படுங்க...’ - இலங்கைக்கு வலியுறுத்திய அமெரிக்கா!

US-urges-Sri-Lankan-leaders-to-act--quickly--to-seek-long-term-solutions-for-economic-crisis

பொருளாதார நெருக்கடிக்கு நீண்டகால தீர்வுகளை ஏற்படுத்த விரைந்து செயல்படுமாறு இலங்கைத் தலைவர்களை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

தேசத்தின் முன்னேற்றத்திற்கான அர்ப்பணிப்புடன் இந்த தருணத்தை இலங்கை நாடாளுமன்றம் அணுக வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

image

மின்சாரம், உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட மோசமான பொருதார நிலைமைகளால் மக்களிடையே ஏற்பட்டுள்ள அதிருப்தியை சரிசெய்வதற்கும், நீண்டகால பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதற்கும் தீர்வுகளை கண்டறிந்து அமல்படுத்த வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்