Published : 10,Jul 2022 01:27 PM

இலங்கை அதிபர் மாளிகையில் கோடிக்கணக்கில் பணம்! எண்ண முடியாமல் சோர்ந்து போகும் மக்கள்

sri-Lanka-Protesters-Say-They-Found-Millions-At-President-s-Residence

இலங்கை அதிபர் மாளிகைக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கிலான பணத்தை போராட்டக்காரர்கள் கண்டெடுத்துள்ளனர்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி உச்சத்தை எட்டியதை அடுத்து, அரசுக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்துள்ளது. இதன் ஒருபகுதியாக, அதிபர் மாளிகைக்குள் நேற்று நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பொருட்களை சூறையாடினர். இதுகுறித்து தகவல் தெரிந்ததும் அந்நாட்டு அதிபர் கோட்டாபய ராஜபக்ச தனது குடும்பத்தினருடன் தப்பியோடிவிட்டார்.

image

இதனிடையே, அதிபர் மாளிகைக்குள் நுழைந்திருக்கும் போராட்டக்காரர்கள், சமையலைறைக்குள் சென்று சமைத்து உண்டு வருகின்றனர். ஒருசிலர், நீச்சல் குளத்தில் நீராடுகின்றனர்.

இந்நிலையில், அதிபர் மாளிகையில் உள்ள ரகசிய அறையை போராட்டக்காரர்கள் இன்று கண்டுபிடித்தனர். அதில் கோடிக்கணக்கிலான பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் பணத்தை போராட்டக்காரர்கள் வெளியே எடுத்தனர். எண்ண முடியாத அளவுக்கு பணம் உள்ளதால் அவற்றை தங்களால் முடிந்த அளவு ஒவ்வொருவரும் எடுத்துச் செல்கின்றனர். இதுதொடர்பாக காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்