Published : 15,Sep 2017 10:14 AM
பெற்ற மகனை கருணைக் கொலை செய்யக்கோரும் தாய்

மகனை கருணைக் கொலை செய்ய பெற்ற தாயே அனுமதி கேட்கும் பரிதாப நிகழ்வு உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த 10 வயது சிறுவன் நீண்ட நாட்களாக புற்றுநோயால் அவதியுற்று வருகிறான். அந்த சிறுவனுக்கு சிகிச்சை செலவுகளை செய்ய தங்களிடம் போதிய பொருளாதார வசதி இல்லாததால், சிறுவனின் தாய் குடியரசுத் தலைவருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், தனது 10 வயது மகன் நீண்ட காலமாக புற்றுநோயால் அவதிப்படுவதாகவும், மேற்கொண்டு சிகிச்சைக்கு செலவு செய்ய வசதி இல்லாததால், தனது மகனை கருணைக் கொலை செய்ய அனுமதிக்குமாறும் அப்பெண் அந்த கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.