Published : 08,Jul 2022 02:44 PM

‘நீ ஒரு ஆர்டிஸ்ட்னு நிரூபிச்சுட்ட’ - ponytail ஸ்டைலதான் பார்பர் இப்படி வெட்டிட்டாரோ?

this-barber-must-misunderstood-about-ponytail-viral-video

90களின் காலம் வரையிலும், ஏன், 2000களின் முற்பகுதி வரையிலும் நம் ஊரில் உள்ள அனைவருக்குமே பக்கத்து தெருவில் உள்ள சலூன் கடை பார்பர்தான் பெஸ்ட் ஸ்டைலிஸ்ட்.

ஆனால் தற்போது தலை முடியை வெட்டுவதற்கும், அதை ட்ரிம்மிங், ஸ்டைலிங் செய்வதற்கும் என அனுபவத்தின் படி, எத்தனையோ ஸ்டைலிஸ்ட் காணக் கிடைக்கிறார்கள்.

என்னதான் திணுசு திணுசாக அவர்கள் முடியை வெட்டினாலும், வீட்டுக்கு வந்து தலைக்கு குளித்தால் பழைய குருடி கதவை திருடி என்ற சொற்றொடர் போல வெட்டிய முடி அளவை தவிர அப்படியேதான் இருக்கும் என பலர் புலம்புவதை கேள்விப்பட்டிருப்போம்.

இப்படி இருக்கையில், குதிரையின் உருவ வடிவில் தலைமுடியை வெட்டிய நபரின் வீடியோ 50 லட்சம் பேரை கவர்ந்திருக்கிறது என்றால் உங்களால் மறுக்க முடியுமா?

ஆம், அந்த வீடியோவில், ஆண் ஒருவரின் தலை முடியை, அச்சு அசலாக குதிரையின் வடிவத்தில் அதன் வால் இருப்பது போலவே வெட்டப்பட்டு இருக்கிறது. இதனைக் கண்ட பலரும் வாவ் போட்டியிருக்கிறார்.

அதில், ஒரு பயனர், போனிடெயில் வேண்டும் எனக் கேட்ட கஸ்டமரின் விருப்பத்தை பார்பர் தவறாக புரிந்துக்கொண்டார் போல எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்