Published : 07,Jul 2022 09:32 PM

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்திய இருவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை

Special-Narcotics-Control-Court-in-Chennai-has-sentenced-two-persons-who-smuggled-ganja-from-Andhra-to-Chennai-by-car-for-12-years-each

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு காரில் கஞ்சா கடத்திய இருவருக்கு தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, சென்னை போதைப் பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆந்திர மாநிலம், நெல்லூரில் இருந்து சென்னைக்கு கார் மூலம் கஞ்சா கடத்துவதாக, போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் 2019 பிப்ரவரி 15ஆம் தேதி வாகன சோதனை நடத்தினர். அப்போது, ஒரு காரில் 6 சாக்கு பைகளில் 150 கிலோ கஞ்சா கடத்திய மதுரை மாவட்டம், மேலவளவு வி.எஸ்.நகரச் சேர்ந்த பச்சியப்பன், திருவாதவூரைச் சேர்ந்த அய்யம்பிள்ளை ஆகியோரை கைது செய்தனர்.

image

இதுதொடர்பான வழக்கு, சென்னை போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி சி.திருமகள் முன் நடந்தது. அவர் பிறப்பித்துள்ள தீர்ப்பில்  இருவருக்கும் தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 2 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

இதையும் படிக்கலாமே: `ஏலம் விடப்பட்ட நகைகளை குறைந்த விலைக்கு வாங்கித் தருகிறேன்’- மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது


சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்