Published : 07,Jul 2022 08:40 PM

'ஓய்வெடுக்க கடற்கரையில் உட்காருங்கள்'- விராட் கோலிக்கு மைக்கேல் வாகன் அட்வைஸ்

Go-and-sit-on-a-beach-Michael-Vaughan-suggests-Virat-Kohli-to-take-three-months-away-from-cricket

விராட் கோலி குறைந்தது 3 மாதங்களாவது ஓய்வு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார் மைக்கேல் வாகன்.

இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி முதல் இன்னிங்ஸில் 11 மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 20 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இந்த மோசமான ஆட்டம் காரணமாக அண்மையில் ஐசிசி வெளியிட்டிருந்த டெஸ்ட் தரவரிசை பட்டியலில் 9வது இடத்திலிருந்து 13வது இடத்திற்கு விராட் கோலி சரிவை சந்தித்துள்ளார்.

image

தொடர்ந்து கோலி பேட்டிங்கில் மோசமாக செயல்பட்டு வருவதால் அவரை தற்காலிக ஓய்வு எடுக்கச் சொல்லி பல முன்னணி வீரர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கோலியின் பேட்டிங் ஃபார்ம் குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகனும் பேசியுள்ளார். கோலி குறித்து அவர் கூறுகையில், “விராட் கோலியை நான் உன்னிப்பாக பார்க்கிறேன். ஐ.பி.எல். தொடருக்கு பின் அவர் சிறிய ஓய்வு எடுத்தார் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அவருக்கு பெரிய ஓய்வு தேவை என்பது போல் எனக்கு தெரிகிறது. அவர் 3 மாதங்களாவது ஓய்வு எடுக்க வேண்டும். அதை செய்து ஒரு கடற்கரையில் போய் உட்காருங்கள். உங்களது குடும்பத்தினருடன் உற்சாகமாக நேரத்தை செலவிடுங்கள். அதை செய்யாவிடில் உங்களின் கிரிக்கெட் பயணம் முன்கூட்டியே முடிவு ஏற்படலாம்.

image

கிட்டத்தட்ட 20 வருடங்களாக கிரிக்கெட் விளையாடி வரும் விராட் கோலியை போன்ற வீரர், 3 மாதங்கள் ஓய்வு எடுப்பதால் எதுவும் மாறிவிடாது. ஓய்வு அவரது பேட்டிங்கிற்கு புத்துணர்ச்சியை கொடுக்குமே தவிர அது அவரது ஆட்டத்தை எந்த வகையிலும் பாதிக்காது''என்று மைக்கேல் வாகன் கேட்டுக்கொண்டார்

இதையும் படிக்கலாமே: சச்சின் சாதனையை இவரால் முறியடிக்க முடியும் - வாசிம் ஜாஃபர் கூறும் வீரர் யார்?


சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்