Published : 07,Jul 2022 06:20 PM

”இந்தியாலதான் இப்படிலா நடக்கும்போல” - அடடே போட வைத்த மணமகன் ஊர்வலம்!

netizens-wow-reaction-with-wedding-procession-during-mumbai-rains

பருவமழையால் மும்பையின் சாலைகளெல்லாம் வெள்ளமாக இருக்கும் அதேவேளையில், மணமகனின் திருமண ஊர்வல வீடியோ காண்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி அடடே போட வைத்திருக்கிறது.

திபான்ஷு கப்ரா என்ற ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் பகிர்ந்த ட்விட்டர் வீடியோதான் இணையவாசிகளிடையே பகிரப்பட்டு வைரலாக்கப்பட்டு வருகிறது.

அதில், கொட்டும் மழையில் மணமகன் பழங்காலத்தில் இருந்த பேருந்து போன்ற வாகனத்தில் ஊர்வலமாக செல்வதும், அவருக்கு பின்னால் உறவினர்கள் பலரும் மஞ்சள் நிற தார்ப்பாயை பிடித்தபடி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என ஆடிப்பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டு செல்கின்றனர்.

இந்த வீடியோவை ஷேர் செய்த ஐபிஎஸ் அதிகாரி, இப்படியொரு ஊர்வலத்தை இதுநாள் வரை நான் கண்டதே இல்லையென கேப்ஷன் இட்டிருக்கிறார். கிட்டத்தட்ட 3 லட்சத்துக்கும் அதிகமானோரால் இந்த வீடியோ பார்க்கப்பட்டிருக்கிறது.

ALSO READ: 

பழ வியாபாரியின் வேடிக்கையான வியாபார உத்தி.. விழுந்து விழுந்து சிரிக்கும் இணையவாசிகள்!

அதுபோக, மணப்பெண் வறட்சியான பகுதியில் இருந்து வந்திருப்பார்போல, அதான் அவர் கல்யாணத்தின்போது மழை கொட்டித் தீர்க்கிறது என பதிவர் ஒருவர் கிண்டல் செய்திருக்கிறார்.

மேலும், திருமண வீட்டாரின் இந்த ஐடியாவும், உறுதியும் என்னை பிரம்பிக்க வைக்கிறது என ஒருவரும் பதிவிட்டுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்