
ஸ்ரீபெரும்புதூரில் இருசக்கர வாகனத்தின் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலே இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தாம்பரத்தைச் சேர்ந்த பார்த்திபன் (31) என்பவரும் விழுப்புரத்தைச் சேர்ந்த டேவிட் (30) ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் ஸ்ரீபெரும்புதூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது பட்டுநூல் சத்திரம் அருகே வரும்போது அதிவேகமாக வந்த டிப்பர் லாரி இருசக்கர வாகனத்தின் மீது உரசியுள்ளது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த இருவர் மீதும் டிப்பர் லாரி ஏறி இறங்கியது.
இதில், சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தலைமறைவாக உள்ள லாரி ஓட்டுனரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
சாலை விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..