Published : 15,Sep 2017 08:11 AM
பணம் இருந்தால், சிறையும் ரிசார்ட்டுதான்: ஹெச்.ராஜா

பணம் இருந்தால், ரிசார்ட்டும் சிறைச்சாலையாகும், "சிறைச்சாலையும் ரிசார்ட்டாகும் என புதுச்சேரியில் பேசிய பாரதிய ஜனதாக் கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் ஊழல் அரசு நடைபெறுவதால் மருத்துவ மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். மாணவர்களின் நலனில் புதுச்சேரி அரசுக்கு அக்கறை இல்லை எனவும் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார். மேலும் அங்கு நிர்வாகச் சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக விமர்சித்துள்ளார்.