Published : 05,Jul 2022 11:37 AM
ஜூன் மாதம் மீண்டும் உயர்ந்தது மின்சார வாகனங்கள் பதிவு!

நாட்டில் மின்சார வாகனங்கள் பதிவு 2 மாதங்களுக்கு பிறகு சென்ற ஜூன் மாதத்தில் 10 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
ஜூன் மாதத்தில் 72,452 மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த மே மாதத்தில் 65,879 மின்சார வாகனங்களே பதிவாகி இருந்தது. அதிகளவில் மின்சார இருசக்கர வாகனங்கள் விற்பனை மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் பிரிவில் காணப்படும் வளர்ச்சி போன்றவையே காரணமாகக் கூறப்படுகிறது.
மின்சார வாகனங்களில் பேட்டரி தீப்பிடித்து எரிந்தது தொடர்ந்து நடந்து வந்ததால் பாதுகாப்பு கேள்விக்குறியானதால் மே மாதத்தில் விற்பனை சரிந்து காணப்பட்டது. அந்தநிலை மாறி ஜூன் மாதத்தில் 42 ஆயிரம் மின்சார இருசக்கர வாகனங்கள் விற்பனையாகியுள்ளன.