Published : 03,Jul 2022 04:13 PM
”வாழ்க்கைய பாருங்க.. செல்ஃபோன் ஓரமா இருக்கட்டும்” - சொன்னது யார் தெரியுமா?

அன்றாட வாழ்க்கையின் அங்கமாகி இருக்கும் செல்ஃபோனை அதிகளவில் பயன்படுத்துவோருக்கு உலகின் முதல் செல்லுலார் போனை கண்டுபிடித்த மார்டின் கூப்பர் முக்கியமான அறிவுரையை வழங்கியிருக்கிறார்.
app கண்காணிப்பு நிறுவனமான app annie வெளியிட்டுள்ள தரவுகளின் படி ஒருவர் சராசரியாக தன்னுடைய ஒரு நாளில் 4.8 மணிநேரத்தை செல்ஃபோனை பயன்படுத்துவதில் செலவிடுகிறார் என தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், உலகின் முதல் செல்போனை உருவாக்கிய மார்டின் கூப்பரிடம் BBC செய்தி நிறுவனம் கடந்த வாரம் பேட்டியெடுத்திருந்தது.
அந்த பேட்டியில், தன்னுடைய ஒரு நாளில் ஐந்து சதவித நேரத்தை மட்டுமே செல்ஃபோனில் செலுத்துவதாக மார்டின் கூப்பர் கூறியிருக்கிறார்.
அப்போது அவரிடம் 5 மணிநேரத்துக்கும் மேல் செல்ஃபோனில் தங்களுடைய நேரத்தை செலவிடுவோருக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
'GET A LIFE!!!'
— BBC Breakfast (@BBCBreakfast) June 28, 2022
How long do you spend on your phone every day?
Are you replacing your #Smartphone with a so called #Dumbphone?
Martin Cooper - the man who helped invent mobiles - had this message for #BBCBreakfasthttps://t.co/P9SgrByh5Q pic.twitter.com/A4ASXL3O4L
அதற்கு அவர், உண்மையில் ஐந்து மணிநேரம் மொபைலில் நேரம் செலவழிக்கிறார்களா? என மிகுந்த ஆச்சர்யத்துடன் கேட்ட மார்டின் கூப்பர், அவர்களுக்கு நான் இதைதான் கூறுவேன். உங்களுடைய வாழ்க்கையை பாருங்கள் என கூறியிருக்கிறார்.
மேலும் “நீங்கள் செல்ஃபோனில் குறைவான நேரத்தையும், வாழ்க்கையில் அதிக நேரத்தையுமே செலவிட வேண்டும்” என 1973ம் ஆண்டு மோட்டோரோலா DynaTAC 8000X என்ற முதல் வயர்லெஸ் செல்லுலார் போனை கண்டறிந்த மார்டின் கூப்பர் கேட்டுக்கொண்டுள்ளார்.
முன்னதாக CBS செய்தியிடம் மார்டின் பேசியிருந்த போது, அந்த DynaTac செல்லுலாரில் பேச வேண்டுமென்றால் அது ஸ்விட்ச் ஆஃப் ஆவதற்கு முன்பு 25 நிமிடங்களை வரையே பேசலாம் எனக் கூறியிருந்தார்.
மோட்டோரோலா ஃபோன் தயாரித்துக் கொண்டிருந்த போதே முதல் கையடக்க போலீஸ் ரேடியோ உட்பட தயாரிப்புகளை கண்டுபிடிக்கவும் மார்டின் கூப்பர் உதவினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்படியாக பல தொலைதொடர்பு சாதனங்களை கண்டுபிடித்தவர்தான் தற்போது மக்களை தங்கள் வாழ்க்கையின் மீது கவனத்தை செலுத்தும்படி கூறியிருக்கிறார்.
ALSO READ: