Published : 29,Jun 2022 11:04 AM

கேரளாவில் தொடர் கொள்ளை: ரயிலில் தப்பிய இரு வடமாநில கொள்ளையர்கள் சென்னையில் கைது

Two-Arrested-in-Robbery-case

கேரள மாநிலத்தில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு ரயில் மூலமாக தப்பிய இரு வடமாநில கொள்ளையர்களை, சென்னையில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் திருச்சூர் பகுதிகளில் உள்ள வீடுகளில் இரவு நேரத்தில் பூட்டை உடைத்து தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு நபர்கள் ரயில் மூலம் தப்பித்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரவுள்ளதாக திருச்சூர் போலீசார் சென்னை சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

image

இந்த தகவலின் பேரில் சென்னை சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் பத்மா கர் தலைமையிலான ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் கேரளா மாநிலம் திருச்சூர் குற்றப்பிரிவு போலீசாருடன் இணைந்து தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் பத்தாவது நடைமேடையில் ஹவுராவில் இருந்து சென்னை வந்த ரயிலில் மேற்கு வங்காள மாநிலம் பூர்ப மெடினிப்பூர் பகுதியைச் சேர்ந்த ஷேக் மக்பூல் மற்றும் கொல்கத்தா பகுதியைச் சேர்ந்த முகமது கவுசர் ஷேக் ஆகிய இருவரும் வந்துள்ளனர்.

பின்னர் கேரளா மாநிலம் திருச்சூர் குற்றப்பிரிவு போலீசார் மற்றும் சென்னை சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் பத்மா கர் தலைமையிலான ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் கேரளா மாநிலம் திருச்சூர் குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

image

அதனைத்தொடர்ந்து பிடிபட்ட இருவரையும் கேரளா போலீசார் திருச்சூர் பகுதியில் இரவு நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 30 லட்சம் ரூபாய் பணத்தை திருடிச் சென்ற வழக்கு தொடர்பாக இருவரையும் கைது செய்து கேரள மாநிலம் திருச்சூர் அழைத்துச் சென்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்