Published : 28,Jun 2022 05:50 PM

தேனி: இருசக்கர வாகனம் மீது டிராவல் பஸ் மோதிய விபத்து - இருவர் பலி

Theni-Travel-bus-collided-with-a-two-wheeler-two-killed

தனியார் டிராவல் பஸ் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் போடி அருகே அழகர்நாயக்கன்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர்கள் சுப்புராஜ் (25), சுருளிராஜ் (45). இவர்கள் இருவரும் போடியில் இருந்து தங்களது சொந்த ஊரான அழகர்நாயக்கன்பட்டி கிராமத்திற்கு ஒரே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

image

அப்போது தேவாரத்தில் இருந்து போடி நோக்கி சென்ற ஸ்ரீ கிருஷ்ணா என்ற தனியார் டிராவல் பஸ் இருசக்கர வாகனம் மீது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது. இதில், இருசக்கர வாகனத்தில் சென்ற சுப்புராஜ் மற்றும் சுருளிராஜ் ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர்.

இதில் பலத்த படுகாயமடைந்த சுப்புராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் பின்பு சம்பவ இடத்திற்கு வந்த தேவாரம் காவல்துறையினர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சுருளிராஜனை மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

image

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த தேவாரம் காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திய தனியார் டிராவல் பஸ் ஓட்டுனர் இம்மானுவேல் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்