Published : 28,Jun 2022 12:18 PM
வாத்துக் கூட்டத்துக்காக மொத்த சாலையையும் மறித்த பாதுகாப்பு ஆபிசர்.. நெகிழ்ச்சி வீடியோ!

போக்குவரத்து பணிகளில் ஈடுபடும் போலீசார் பலரின் மனிதநேயமிக்க செயல்கள் வீடியோக்களாக மக்களின் மனங்களை வெல்வது தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.
அந்த வகையில், பிரான்ஸ் நாட்டின் பாரிஸின் சாலையில் வாத்து கூட்டத்துக்காக மொத்த சாலையையும் சற்று நேரத்துக்கு மறித்திருக்கிறார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரி.
இது தொடர்பான வீடியோதான் 3 மில்லியனுக்கும் மேலானோரால் பார்க்கப்பட்டிருக்கிறது. அதில், தாய் வாத்து ஒன்று தனது குட்டி வாத்துக்களுடன் சுற்றித் திரிந்திருக்கிறது. அப்போது சாலையை கடக்க முற்பட்ட அந்த வாத்துக்கூட்டம் வாகனங்கள் தொடர்ந்து வந்ததால் கடக்க முடியாமல் திணறியிருக்கிறது.
Meanwhile in Paris..
— Buitengebieden (@buitengebieden) June 26, 2022
IG: licsu pic.twitter.com/xWRIfKwkXN
இதனைக் கண்ட அந்த செக்யூரிட்டி ஆபிசர் தனது கையை அசைத்து வாகனங்களை நிறுத்தச் செய்து வாத்துக்கூட்டம் சாலையை கடக்க உதவி செய்திருக்கிறார். இந்த நிகழ்வு அங்கிருந்த மக்களால் பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பகிர செய்யப்பட்டிருக்கிறது.
பாதுகாப்பு அதிகாரியின் இந்த செயல் மிகுந்த நெகிழ்ச்சியை கொடுப்பதாகவும், ஆறு அறிவு உள்ள மனிதர்களை காப்பதற்கே தவறும் வாழ்வில் வாத்துக்களுக்கு உதவியது பெருமைமிகு தருணமாக இருக்கிறது எனவும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள். மேலும், சோனிக் படத்தில் வரும் காட்சி நிஜத்தில் நடந்திருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
ALSO READ: