டென்னிஸ்: ஜோகோவிச் செய்த புதிய சாதனை!

டென்னிஸ்: ஜோகோவிச் செய்த புதிய சாதனை!
டென்னிஸ்: ஜோகோவிச் செய்த புதிய சாதனை!

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம், அனைத்து வகை கிராண்ட் ஸ்லாம் போட்டிகளிலும் தலா 80 வெற்றிகளை குவித்த முதல் வீரர் என்ற அரிய சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.

முதல் நிலை வீரரான ஜோகோவிச், விம்பிள்டன் முதல் சுற்றில் தென் கொரியாவின் குவான் சூன் வூ-வை எதிர்கொண்டார். இந்தப் போட்டியில் 6-3, 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் நோவக் ஜோகோவிச் போராடி வெற்றி பெற்றார்.

விம்பிள்டன் தொடரில் ஜோகோவிச்சின் 80ஆவது வெற்றி இதுவாகும். முன்னதாக பிரெஞ்ச் ஓபனில் 85 வெற்றிகளையும், ஆஸ்திரேலிய ஓபனில் 82 வெற்றிகளையும், அமெரிக்க ஓபனில் 81 வெற்றிகளையும் குவித்துள்ளார்.

இதன் மூலம் அனைத்து கிராண்ட் ஸ்லாம்களிலும் தலா 80 வெற்றிகளை குவித்து ஜோகோவிச் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். இந்த சாதனையை நிகழ்த்திய முதல் வீரர் ஜோகோவிச் தான்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com