விஷால் நடிப்பில் இன்று வெளியான துப்பறிவாளன் திரைப்படம் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த துப்பறிவாளன் படம் இன்று வெளியானது. இந்தப்படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் மூலம் விஷாலே தயாரித்து இருந்தார். இந்நிலையில், நடிகர் சங்க செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் பதவி வகித்து வரும் விஷால் திருட்டு வீடியோவை ஒழிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இருப்பினும், சட்ட விரோதமாக தமிழ் ராக்கர்ஸ் மற்றும் தமிழ்கன் ஆகிய இணையதளங்கள் படங்கள் ரிலீசான அன்றே இணையதளத்தில் வெளியிட்டு திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. இந்த இணையதளத்தில் அட்மினாக செயல்படுவபர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுப்பேன். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என விஷால் கூறியிருந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன் தமிழ்கன் இணையத்தின் அட்மின் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால், அப்பாவிகளை கைது செய்ய வேண்டாம். எந்த அட்மினும் கைது செய்யப்படவில்லை. உங்களால் முடிந்தால் துப்பறிவாளன் படத்தை காப்பாற்றிக் கொள்ளுங்கள் என தமிழ்கன் இணையம் வெளிப்படையாக சவால் விட்டது. இதனையடுத்து இன்று வெளியான துப்பாறிவாளன் படத்தை பைரசி கும்பலிடம் இருந்து காப்பாற்ற மாவட்டம்தோறும் விஷால் தனது ஆதரவாளர்களைப் பறக்கும் படையினராக நியமித்து தியேட்டர்களைக் கண்காணிக்கச் சொல்லியிருந்தார்.
இந்நிலையில், துப்பறிவாளன் படம் தமிழ்கன் இணையதளத்திலேயே வெளியாகி இருக்கிறது. அதில் வெளியிடப்பட்ட திருட்டு ப்ரிண்டை இதுவரை 55,000-க்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். இணையதளத்தில் துப்பறிவாளன் படத்தை வெளியிட்டு தமிழ்கன், தமிழ்ராக்கர்ஸ் இணையதளங்கள் சவாலில் ஜெயித்துள்ளது.
Loading More post
இழந்து விடக்கூடாதது ஒன்றே ஒன்றுதான்! - #MorningMotivation #Inspiration
குருமூர்த்தி போல எல்லா பிராமணர்களும் கோழைகள் அல்ல - சுப்ரமணிய சுவாமி சர்ச்சை ட்வீட்
ஊழியர் சம்பளத்தை தவறுதலாக ரூ.1.4 கோடி செலுத்திய நிறுவனம்... தலைமறைவான ஊழியர்!
உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி! விலை உயரப்போகும் பொருட்கள் எவை எவை? முழு விபரம்!
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix