Published : 26,Jun 2022 01:36 PM

ஜி 7 மாநாட்டில் பிரதமர் மோடி... இசைக்கச்சேரியுடன் வழிநெடுக உற்சாக வரவேற்பு!

PM-Narendra-Modi-lands-in-Germany-s-Munich-for-G7-summit

ஜி7 மாநாட்டில் பங்கேற்க ஜெர்மனி சென்ற பிரதமர் மோடிக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.

ஜெர்மனியில் இன்றும், நாளையும் 48ஆவது ஜி-7 மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க வருமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜெர்மனி அதிபர் ஒலாப் ஸ்கால்ஷ் அழைப்பு விடுத்திருந்தார். அதன்பேரில் அந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ஜெர்மனி சென்றுள்ளார். முனிச் நகருக்கு சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் இசைக்கச்சேரியுடன் அந்நாட்டு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, தான் தங்க உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு கார் மூலம் சாலை மார்க்கமாக பிரதமர் மோடி சென்றார்.

image

அப்போது, ஜெர்மனி வாழ் இந்தியர்கள் வழிநெடுகிலும் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளித்தனர். மேலும் குழந்தைகளுடன் அவர் உரையாடினார். ஏராளமானோர் பிரதமர் மோடியுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். இதனிடையே ஜி 7 மாநாட்டில் சுற்றுச்சூழல், எரிசக்தி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்