ரோகித் சர்மாவுக்கு கொரோனா பாதிப்பு - இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு!

ரோகித் சர்மாவுக்கு கொரோனா பாதிப்பு - இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு!
ரோகித் சர்மாவுக்கு கொரோனா பாதிப்பு - இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு!

கொரோனா பாதிப்பால் இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா பங்கேற்க மாட்டார் எனத் தெரிகிறது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு தள்ளி வைக்கப்பட்ட இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் ஜூலை 1 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்க இங்கிலாந்துக்கு சென்றுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தற்போது அங்கு பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதையடுத்து ஹோட்டலில் அவர், தனிமைபடுத்தப் பட்டுள்ளதாகவும், மருத்துவக்குழுவின் கண்காணிப்பில் அவர் உள்ளதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதனால் ஜூலை 1 ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா பங்கேற்க மாட்டார் எனத் தெரிகிறது.

ஏற்கனவே அஸ்வினுக்கு இந்தியாவில் பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனால் அவர்  இங்கிலாந்துக்கு தாமதமாக சென்று அணியுடன் இணைந்தார். அதனால் இப்போது நடைபெற்று வரும் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு டெஸ்ட் போட்டியில் அஸ்வின் பங்கேற்கும் வாய்ப்பு இருந்தாலும், ரோகித் சர்மா பங்கேற்பதில் சிக்கல் இருப்பதால் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.  

 இதையும் படிக்கலாம்: 44வது செஸ் ஒலிம்பியாட் தொடரிலிருந்து விலகியது சீனா! இந்தியாவுக்கு பாதிப்பா?

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com