குட்கா விவகாரத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க விதிக்கப்பட்ட தடையை அக்டோபர் 12ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தின் போது தமிழகத்தில் தடையை மீறி குட்கா விற்பனை அதிகளவில் நடைபெற்று வருவதாக எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டி இருந்தார். அப்போது ஆதாரம் இல்லாமல் குற்றஞ்சாட்டக்கூடாது என்று சபாநாயகர் தனபால் தெரித்தார். இதையடுத்து அடுத்த நாள் சட்டப்பேரவையில் குட்கா விவகாரம் குறித்த விவாதத்தின் போது, ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் 21 பேர் தங்கள் கையிலிருந்த குட்கா பாக்கெட்டுகளை ஆதாரமாக எடுத்து காட்டினர்.
இதையடுத்து சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு வந்தது தொடர்பாக விளக்கமளிக்கக்கோரி மு.க.ஸ்டாலின் உட்பட 21 திமுக எம்.எல்.ஏக்ளுக்கும் கடந்த மாதம் 28ஆம் தேதி உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து திமுக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என அரசு தரப்பு வழக்கறிஞர் விஜய் நாராயணன் தனது தரப்பு வாதத்தை முன்வைத்திருந்தார். இருப்பினும் திமுக எம்.எல்.ஏக்கள் மீது குட்கா விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டது.
இந்நிலையில் இன்று விசாரனைக்கு வந்த குட்கா வழக்கில், திமுக எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க விதித்த தடையை அக்டோபர் 12ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் அன்றைய தினத்தன்றே, இந்த மனு விசாரணைக்கு உகந்ததா என்பதையும் அறிவிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Loading More post
சூறைக்காற்றால் குளிரும் டெல்லி! விமான சேவைகள் பாதிப்பு
'மதரஸா' என்ற வார்த்தையே இருக்கக் கூடாது - முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா
சென்னை: பைக்கில் பின்னால் அமர்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்... மீறினால் அபராதம்
`இங்க இருக்க பயமாருக்கு ப்பா’- கேரள விஸ்மயாவின் கடைசி வார்த்தைகள்; வழக்கில் இன்று தீர்ப்பு
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்