Published : 25,Jun 2022 02:08 PM

போடி: அதிமுக அலுவலகத்தில் இருந்து அகற்றப்பட்ட இபிஎஸ் படம்

Bodinayakanur--Edappadi-palanisamy-Photos-removed-in-Admk-office

போடி அதிமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம் அகற்றப்பட்டது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த விவகாரம் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக பூதாகரமாக வெடித்த நிலையில், கடந்த 23-ஆம் தேதி சென்னை தனியார் திருமண மண்டபத்தில் அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

image

இதில் கலந்து கொண்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஸை அவமானப்படுத்தி, அவர் மீது தண்ணீர் பாட்டில்கள் வீசப்பட்தாக அவரின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இதையடுத்து ஓபிஎஸ்-ன் ஆதரவாளர்கள் தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து ஆர்ப்பாட்டமும், அவரது உருவ பொம்மையை எரித்தும் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் ஓபிஎஸ்-ன் சொந்த தொகுதியான தேனி மாவட்டம் போடியில் அதிமுக போடி நகர செயலாளர் பழனிராஜ், அதிமுக அலுவலகத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்தை அகற்றினர்.

image

மேலும் அலுவலகத்தின் வெளியே வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனரில் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்தை அதிமுவினர் மை ஊற்றி அழித்தனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்