பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் உலக லெவன் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பாகிஸ்தானின் லாகூரில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக, பாபர் அசாம் 45 ரன்களும், அகமது ஷேசாத் 43 ரன்களும் எடுத்தனர். 175 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய உலக லெவன் அணி, 14 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 106 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறியது. கடைசி 2 ஓவர்களில், வெற்றிக்கு 33 ரன்கள் தேவைப்பட்டன. ஹாசிம் ஆம்லா, திசாரா பெரேரா ஆகியோர் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
ஒரு பந்து மீதமிருந்த நிலையில், உலக லெவன் அணி வெற்றி இலக்கை எட்டியது. ஆம்லா 72 ரன்களும் பெரேரா 19 பந்துகளில் 47 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இரு அணிகள் இடையிலான தொடரை வெல்வது யார் என்பதை தீர்மானிப்பதற்கான கடைசிப் போட்டி லாகூரில் நாளை நடைபெறவுள்ளது.
Loading More post
இந்தியாவில் டெஸ்லா கார்கள் உற்பத்தி இல்லை: எலான் மஸ்க் அறிவிப்பின் காரணம் என்ன?
‘குளங்கள் அமைந்திருக்கும் அனைத்து மசூதிகளிலும் ரகசிய ஆய்வு’ - உச்சநீதிமன்றத்தில் மனு
‘பணிகளில் சுணக்கம் காட்டாதீர்கள்’-கலெக்டர்களுக்கு சுகாதாரத்துறை செயலர் அட்வைஸ்
பேத்தியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக வழக்கு - உத்தராகண்ட் முன்னாள் அமைச்சர் தற்கொலை
முதல்வரின் திடீர் கள ஆய்வு எதிரொலி: அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவிட்ட தலைமைச் செயலாளர்
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!