தன்னை தாக்க வந்த முதலையை முதியவர் ஒருவர் பாத்திரத்தை கொண்டு அடித்து விரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நம் ஊர்களில் பெண்கள் புலியை முறத்தால் அடித்தே விரட்டினார்கள் என்பது போல, ஆஸ்திரேலியாவில் முதலையை சமையல் பாத்திரத்தால் அடித்து விரட்டியிருக்கிறார் முதியவர் ஒருவர்.
ஆஸ்திரேலியாவின் வடக்கில் உள்ள டார்வின் பகுதியில் கேளிக்கை விடுதி நடத்திவருகிறார் Kai Hansen என்ற முதியவர். தன்னை அச்சுறுத்த வந்த முதலையை வெறும் வாணலியால் (frying pan) விரட்டியடித்திருக்கிறார்.
ALSO READ:
முதலை அதன் வாயை திறந்தபடி தாக்க வந்த போது, பப் உரிமையாளரான ஹேன்சன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வாணலியால் அதன் தலையில் அடிப்பதை வீடியோவில் காணலாம். அதனையடுத்து முதலை காட்டு பகுதிக்குள் கடகடவென ஊர்ந்து சென்றிருக்கிறது.
Airborne Solutions Helicopter Tours என்ற ஃபேஸ்புக் பக்கத்தில்தான் ஹென்சன் முதலையை விரட்டிய வீடியோ பகிரப்பட்டிருக்கிறது. இந்த வீடியோவை சுமார் 2 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்திருக்கிறார்கள். இதனைக் கண்ட இணையவாசிகள் அதிகமானோர் அந்த வீடியோவை ஷேர் செய்து தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.
ALSO READ:
Loading More post
Fact Check: ரசிகருக்கான பிறந்த நாள் வாழ்த்து கடிதத்தில் தேதியை மாற்றி எழுதினாரா அஜித்?
உத்தவ் தாக்கரே ராஜினாமாவால் பாஜகவினர் கொண்டாட்டம் - முதல்வராகிறார் ஃபட்னாவீஸ்
தமிழ்நாடு போலீஸாக விருப்பமா? உங்களுக்காக இன்று வருகிறது அப்டேட்
உதய்பூர் கொலையாளிகளுக்கு பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு - விசாரணையில் அம்பலம்
ஜவான் படத்தில் யாரை கொல்லப்போகிறார் அட்லீ? - புது அப்டேட்டால் நெட்டிசன்களிடையே சலசலப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix