[X] Close

ஆப்கானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 920 ஆக உயர்வு

உலகம்

At-least-900-people-were-killed-and-hundreds-were-injured-after-an-earthquake-of-magnitude-6-1-jolted-Afghanistan

ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால், குறைந்தது சுமார் 920 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தானில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1  ஆக பதிவாகியுள்ளது. கோஸ்ட் நகரிலிருந்து 44 கி.மீ தொலைவில் சுமார் 51 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் பாதிப்புகளால் குறைந்தது 920 பேர் உயிரிழந்திருக்கக்கூடும் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

image

நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கான கட்டிடங்களும் வீடுகளும் இடிந்து விழுந்த நிலையில், இடிபாடுகளை சிக்கியவர்களை மீட்கும் பணி விரைவாக நடந்து வருகிறது. பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு உடனடியாக நிவராண உதவிகள் அனுப்பப்பட்டுள்ளதாக தலிபான் அரசு தெரிவித்துள்ளது.

image


Advertisement

image

இதையும் படிக்கலாம்: சைக்கிளில் பெட்ரோல் டேங்கை மாட்டி விநோதமாக பெட்ரோல் வாங்கிச் சென்ற இளைஞர்!

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close