மழைக்காலம் வந்தாச்சு.. நோய்கள் வராமல் தடுக்க பின்பற்றவேண்டிய உணவுமுறைகள் என்ன?

மழைக்காலம் வந்தாச்சு.. நோய்கள் வராமல் தடுக்க பின்பற்றவேண்டிய உணவுமுறைகள் என்ன?
மழைக்காலம் வந்தாச்சு.. நோய்கள் வராமல் தடுக்க பின்பற்றவேண்டிய உணவுமுறைகள் என்ன?

மழை சீசன் தொடங்கியாச்சு. இனி வெக்கை இருக்காது, ஃபேன், ஏசினு எப்போதும் அதன் கீழ் இருக்க வேண்டிய அவசியம் இருக்காது. குளுகுளுனு காத்து, சில்லென மழை, ஒரு கப் காஃபி அல்லது டீ, ராஜாவோ, ரஹ்மானயோ கேட்டுட்டே இருக்கலாம் இப்படி போன்ற ஜாலி மொமண்ட்க்கள் இருக்கும்தான்.

ஆனால், சம்மரைபோல மழைக் காலத்துலயும் ஆரோக்கியத்தை பேணி காப்பது முக்கியம்தான். ஏன்னா, மழை பெய்யுதேனு வெளியே போய் சந்தோஷமா ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்னு இருந்தா, மறுநாள் சளி, இருமல், காய்ச்சல் எல்லாம் வரிசையா வரும்.

இப்படியான தொந்தரவுகளை தவிர்க்க, மழைக் காலங்களில் என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக்கலாம், எடுத்துக்க கூடாதுனு இங்க பார்ப்போம்.

1) முழுமையா சமைக்காத உணவுகளை சாப்பிட்டால் அது மூலமா பாக்டீரியா, வைரஸ் உபாதைகள் நேரும். குறிப்பாக இறைச்சிகளை உணவாக எடுத்துக்கொள்ளும்போது அதை, சரியான வெப்பநிலையில் சமைத்து உண்ண வேண்டும்.

2) மழைக்காலங்களில் உணவு மற்றும் நீர் மூலம் பரவும் நோய்களுக்கான வாய்ப்புகள் மிக அதிகமாக இருக்கும். எனவே, இந்த நேரத்தில் ஃபாஸ்ட்புட் போன்ற சாலையோரங்களில் விற்கப்படும் உணவுகளில் இருந்தும், ஹோட்டல்களில் சாப்பிடுவதை தவிர்ப்பதும் நல்லது.

ALSO READ: 

3) பொதுவாகவே காய்கறிகள், பழங்களை கழுவி பயன்படுத்துவது நல்லதுதான். ஆனால் மழைக்காலங்கள்ல காய்கறிகள், பழங்களை ரொம்பவே கவனாக கழுவ வேண்டும். அதுவும் முட்டைகோஸ் போன்ற காய்கறிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்துவது சிறந்தது. அதுபோல, சிக்கன் மட்டன் போன்ற இறைச்சிகளையும் சுடுதண்ணீரில் கழுவி பயன்படுத்தலாம்.

4) மீன் வகைகளை விரும்பி உண்ணக்கூடிய ஆட்களா இருந்தா மழைக்காலங்கள்ல அதை குறைச்சுக்குறது நல்லது. பருவமழை சமயத்துல நீர் மாசுபாடு ஏற்பட அதிக வாய்ப்பிருப்பதால் அதனால மீன் உள்ளிட்ட நீர் வாழ் உயிரினங்கள்ளாம் பாதிக்கக்கூடும். அதனால seafoods தவிர்க்கிறது நல்லதாக இருக்கும்.

ALSO READ: 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com