Published : 20,Jun 2022 11:14 AM
கர்நாடகாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த தந்தை மகன் பலி

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில், லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தமிழகத்தை சேர்ந்த தந்தை மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த கார்த்தி (17), அஞ்சப்பா (40), புனித் (15), கார்த்திக் (19), ராமசந்திரா (40) உள்பட 10 பேர் 2 கார்களில் தட்சிண கன்னடாவில் உள்ள தர்மஸ்தலா கோயிலுக்குச் சென்றுள்ளனர்.
அப்போது கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் ஆலூர் அருகே சென்றபோது, எதிரே வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து இவர்கள் சென்ற ஒரு கார் மீது மோதியது. அதில் காரில் பயணம் செய்த தந்தை, மகனான அஞ்சப்பா மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், 3 பேர் படுகாயம் அடைந்தனர். மற்றொரு காரில் வந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஆலூர் போலீசார், விபத்தில் உயிரிழந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.