Published : 19,Jun 2022 04:35 PM

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு காய்ச்சல்.. இரண்டு நாட்கள் அரசு விழாக்கள் ரத்து!

cm-mk-stalin-event-cancelled-due-to-his-illness

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல் இருப்பதால், நாளையும் நாளை மறுநாளும் அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள்
ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து அரசு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், 20ஆம் தேதி ராணிப்பேட்டை மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும், 21ஆம் தேதி வேலூர் மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களிலும் முதலமைச்சர் கலந்து கொள்வதாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லேசான காய்ச்சல் காரணமாக மருத்துவர்கள் ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளதால், இந்நிகழ்ச்சிகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

image

முன்னதாக சென்னை டி.டி.கே. சாலையில் உள்ள மியூசிக் அகாடமியில் “The Man who would not be kind - V.P.Raman” என்ற சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரை ஆற்றுவதாக இருந்தது.

ஆனால், “முதல்வருக்கு லேசாக உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் அவரை மருத்துவர்கள் ஓய்வெடுக்கக் கூறியிருக்கிறார்கள். அதனால்தான் அவர் இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை” எனக் கூறி அவருடைய உரையை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வாசித்திருந்தார்.

அதேபோல, சென்னை ராணி மெய்யம்மை திருமண மண்டபத்தில் சி.வி.எம். அண்ணாமலையின் கொள்ளு பேரன் தமிழ் திரையன் திருமணத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தவிருந்தார். ஆனால் அவருக்கு பதில் அவரது மனைவி துர்காலி ஸ்டாலின் சென்றிருந்தார்.

ALSO READ: 

‘தேச நலனுக்கு எதிரான 'அக்னிபத்' திட்டத்தை திரும்பப் பெறுங்கள்’ - முதல்வர் மு.க.ஸ்டாலின்

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்