அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராட்டம்: சென்னையில் போலீசார் தீவிர கண்காணிப்பு

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராட்டம்: சென்னையில் போலீசார் தீவிர கண்காணிப்பு
அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராட்டம்: சென்னையில் போலீசார் தீவிர கண்காணிப்பு

மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சென்னையிலும் போராட்டம் வெடித்துள்ளது.

இன்று காலை ஆரணி, கோவை, திருவண்ணாமலையில் இருந்து வந்த இளைஞர்கள், தலைமைச் செயலகம் அருகே ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார், போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தி போர் நினைவு சின்னம் அழைத்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து போராட்டக்காரர்கள் அனைவரையும் கைது செய்து எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்திற்கு போலீசார் கொண்டு சென்றனர். இந்த போராட்டம் எதிரொலியாக கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்குள் போராட்டம் நடத்தும் எண்ணத்துடன் வரும் இளைஞர்களை தடுப்பதற்கு அந்தந்த மாவட்ட போலீசாருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com