Published : 17,Jun 2022 08:54 PM

விமர்சனங்களை தகர்த்த தினேஷ் கார்த்திக்.. தென்னாப்ரிக்கவுக்கு 170 ரன் இலக்கு

India-vs-South-Africa-4th-T20I-Innings-Break

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 4-வது டி20 ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு  169 ரன்கள் குவித்துள்ளது.

இந்தியாவுக்கு வந்துள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரு ஆட்டங்களில் தென்னாப்பிரிக்காவும், 3-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. தொடரில் தென்னாப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடந்துவரும் 4-வது ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு  169 ரன்கள் சேர்த்துள்ளது.

image

இந்த ஆட்டத்தில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய தினேஷ் கார்த்திக் 27 பந்துகளில் 55 ரன்கள் (9 பவுண்டரிகள், 2 சிக்ஸர்) விளாசினர். வழக்கமாக தினேஷ் கார்த்திக் கடைசி இரண்டு ஓவர்களில்தான் அதிரடியாக விளையாடி ரன்களை குவிப்பார். 15 ஆவது ஓவரிலோ அதற்கு முன்பாகவோதான் களமிறங்குவார். விரைவில் ஆட்டமிழந்துவிடுவார். நீடித்து நின்று ரன்களை குவிக்க தடுமாறுவார் என்ற விமர்சனம் அவர் மீது உண்டு. அதனை இந்தப் போட்டியில் தகர்த்துள்ளார் தினேஷ் கார்த்திக். இன்றையப் போட்டியில் ரிஷப் பண்ட் ஆட்டமிழந்த பின்னர் 13 ஓவரிலேயே அவர் களமிறங்கினார். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதமும் விளாசியுள்ளார். ஹர்திக் பாண்டியா 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் செய்து வருகிறது.  தொடரை இழக்காமல் இருக்க இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டியது கட்டாயமாகும்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்